Apr 3, 2010

பிற வலைகளில் ஜீயார் - 2

Tuesday, June 17, 2008

New Exam pattern in India (Revised)

10 votes
New Exam pattern in India (Revised):

1. General students - Answer ALL questions .
2. OBC - WRITE ANY one question.
3. SC - ONLY READ questions.
4. ST - THANKS FOR COMING..
AND.
5. Gujjars- THANKS FOR ALLOWING OTHERS TO ATTEND THE EXAMINATION .. !!

கமெண்ட்ஸ்
ஜயராமன் said... கிண்டலையும் மீறி தேசத்தின் இழிநிலையை யதார்த்தமாக சொல்கிறது. தந்ததற்கு நன்றி.

இன்னொரு வகையும் இருக்கிறது. பணம் கட்டினால் வீட்டிற்கு சர்டிபிகேட் தேடி வரும். தேர்வு இடத்துக்கு போகவே வேண்டாம். சிறப்பாக டாக்டர், கவிஞர் பட்டங்கள் இதில் அடக்கம். அதற்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும். கொஞ்சம் பணம் அதிகமாக இருந்தால் பித்தளை தாரகை என்று கூட ஒரு புதிய பட்டம் பெறலாம்.
geeyar said...

நீ செய்த பாவம் உன் பிள்ளைகளுக்கு என்பர்.
ஐயமீர் இன்னும் இந்தியாவில் இட ஒதுக்கீடு இல்லையெனில் சில சமுகங்கள் மேலே வரமுடியாது என்ற நிலையே உள்ளது.
அதுவரை முன்னோர்கள் செய்த பாவத்திற்கு பிராயசித்தமாக காத்திருங்கள்.

மந்தைக்கு மேயச் செல்லும் மாடுகளில் முந்திச் செல்லும் மாட்டினை கட்டையை கட்டி அதன் வேகத்தை குறைப்பார்கள்.

மேலும் நடக்க முடியாத கன்றினை தோழில் சுமந்து செல்வர்

அப்பொழுதுதான் மேய்ப்பனால் அனைத்து மாடுகளையும் அரவணைத்து செல்ல முடியும். இறுதியாக வரும் மாடு இலக்கினை அடையட்டும். நிச்சயம் கட்டுகள் விலக்கப்படும்.

ஜயராமன் said... ஜீயார் ஐயா,

//// ஐயமீர் இன்னும் இந்தியாவில் இட ஒதுக்கீடு இல்லையெனில் சில சமுகங்கள் மேலே வரமுடியாது என்ற நிலையே உள்ளது. ///

நீங்கள் சொல்லும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் sc / st க்கு வழங்கும் உரிமைகளை யாருமே கேட்கவில்லை. ஆனால், அரசிலும், சமூகத்திலும் ஆதிக்க சக்தியாக இருந்துகொண்டு இன்னும் நான் பிற்படுத்தப்பட்டவன், மிக பிற்படுத்தப்பட்டவன், இதர பிற்படுத்தப்பட்டவன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு தன் கீழ் தலித் மக்களை இன்னும் கொடுங்கோல் அடக்குமுறை பண்ணிக்கொண்டு எல்லா சமுதாயங்களையும் ஏமாற்றும் ஒரு ஆதிக்க கூட்டத்தைப்பற்றித்தான் பேச்சு.
அவர்கள் பின்பற்றி இருக்கிறார்களா. எந்த விதத்தில். பணத்திலா, அந்தஸ்திலா - அப்படி என்றால் பணம், அந்தஸ்து என்று தகுதி அடிப்படையில் பின்பட்டவர்களை அடையாளம் காண வேண்டியதுதானே. ஏன் சாதியை கட்டிக்கொண்டு அழுகிறீர்கள். கிரீமி லேயர் கூட போய் விடக்கூடாது என்று ஏன் இந்த ஆதிக்க சக்திகள் கூப்பாடு போடுகின்றன.

நீங்கள் சொன்ன "முன்னேபோகும் மாடு" உதாரணம் அதற்கு இல்லையா. இந்த ஆதிக்க சக்திகளை ஓரம் போக சொல்லுங்கள்.

உண்மையான sc / st தலித் மக்கள் பலன் கிடைக்கும்வரை இவர்களை ... பிடித்துக்கொண்டு ஓரமாக உட்காரச்சொல்லுங்களேன். தனக்கு என்று வரும்போது அந்த மாட்டுக்கு தடை போடக்கூடாதா! உங்கள் நியாயம் அநியாயமாய் இருக்கிறது.

நன்றி
geeyar said...

என் மதிப்பிற்குரிய ஜெயராமன் அவர்களுக்கு

தலித் மக்கள் இன்னும் பின்தங்கியிருக்கின்றனர். உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். 30% வளர்ச்சியை அவர்கள் அடைந்திருக்கின்றனர்.


பிசி, எம்பிசி முன்னேறிவிட்டனர். சரி உங்களை வழி மொழிகிறேன். 90% வளர்ச்சியை அடைந்திருக்கின்றனர்.


இன்னும் சில உயர் பதவிகள் மீதம் இருக்கின்றதே. அதையும் நாங்கள் அடைந்து கொள்கிறோமே.

அதன்பிறகு நாம் இருவருமே காத்திருப்போம் அவர்கள் வரும்வரை.

பிற வலைகளில் ஜீயார் 1

ட்லி வடையில் வந்த செய்தியும் விவாதமும்.

Monday, March 29, 2010

மண்டேனா ஒன்று

4 votes
இருண்ட இதயங்கள்

”ஒருவருக்கு நமது இதயத்தில் இடமளித்துவிட்ட பிறகு அவரை எவ்வாறு மறக்க இயலும்?” இது ஏதோ ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனமாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். இல்லை!! இதுவரை வாழ்நாளில் திரைப்பட்த்தையே பார்த்தறியாத 25 வயது படைத்த பெண்ணினுடைய வார்த்தைகள். இவர் வீட்டில் தொலைக்காட்சியும் கிடையாது; தனது குடும்பத்தார் மற்றும் அண்டை வீட்டு சிறுமிகள் இருவர் தவிர இதுவரை யாருடனும் பழகியதும் கிடையாது.


சமியா முல்லாஹ் என்ற இப்பெண் தனது எதிர்காலக் கணவருடைய வருகைக்காக கடந்த ஏழு ஆண்டுகளாக்க் காத்திருக்கிறார். அவரின் எதிர்காலக் கணவர் வேறு யாருமல்ல, மும்பை செண்ட்ரல், முல்லுண்ட் மற்றும் வில்லே பார்லே ரயில் குண்டு வெடிப்புகளில் (2003) முக்கியத் தொடர்புடைய தீவிரவாதி!இன்னும் 19 நாட்களில் நடைபெறவுள்ள அவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அப்பொழுது 27 வயதுகள் நிரம்பியிருந்த அத்னான் முல்லா, மே 5, 2003 இல் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் பம்பாய் உயர்நீதி மன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மாநில அரசு உயர்நீதி மன்றத்தின் ஜாமீன் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளது.


இதற்கிடையில், மறுபடியும் திருமண ஏற்பாடுகள் மணமகள் வீட்டில் துவங்கி விட்டன. அத்னான் இன்னும் சில நாட்களில் ஜாமீனில் வெளி வந்து, தன்னை திருமணம் செய்து கொள்வார் என சமியா உறுதியாக நம்புகிறார். மேலும் தான் சென்ற வருடம் மேற்கொண்ட ஹஜ் யாத்திரைக்கு அது அல்லாஹ் தரும் பரிசாக இருக்கும் எனவும் நம்புகிறார்.

“இதுதான் என்னுடைய விதி. எங்களுடைய விதியானது 80,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிர்ணயிக்கப்பட்டுவிட்ட்தாக எங்களுடைய இமாம் கூறியிருக்கிறார்”, என்று சமியா சொல்கிறார். விதி என்பது எப்பொழுதுமே ஒரு வசதியான வார்த்தை, முட்டாள்தனமான வாதங்களுக்கு பைத்தியக்காரத்தனமான வர்ணங்கள் கொடுப்பதற்கு.

தீவிரவாதம், பொதுவாக நாம் அறிந்தது போல், ஆண்களுடைய குரலையும், முகத்தையும் காரணிகளையும் உடையது. அவர்களுடைய நோக்கங்களையும் நாம் அறிவோம். ஆனால் அவர்களைச் சார்ந்துள்ள பெண்களைப் பற்றி? அறிந்தோ அறியாமலோ, சட்டரீதியான சமூக மற்றும் பொருளாதார ரீதியாக தீவிரவாதிகளுடன் கட்டுண்டுள்ளவர்கள் பற்றி? இவர்கள் தங்களுடைய கறை படிந்த வாழ்க்கைத் துணைகளை மறுதலிக்கிறார்களா அல்லது அவர்களுக்குத் துணை நிற்பதில் உறுதியாக இருக்கிறார்களா அல்லது ஒரு மறுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்களா?

இக்கேள்விகளுக்கான விடைகளைத் தேடி, உத்திரப் பிரதேசத்தின் மேற்கில் அமைந்துள்ள, “தீவிரவாதிகளின் ஆரம்பப்பள்ளி” என்றழைக்கப்படும் மாவட்டமான “ஆஸம்கார்க்” ற்குப் பயணம் மேற்கொண்டோம். அங்கு முதலில் செல்வதே பெரிய விஷயம், பிறகு அங்குள்ள பெண்களிடம் பேசுவது. அங்குள்ள பெண்கள் பேசா மடந்தைகளாகவும், அணுகுவதற்கே கடினமானவர்களாகவும் இருந்தனர். இவ்வாறான இடங்களில் அவர்களை நேரடியாக அணுகவும் முடியாது. அவர்களுக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதை விட எதுவும் தெரியாது என்பதே நிதர்ஸனம், அவர்கள் கதறி அழுவதை மட்டுமே நாம் காண இயலும்.


அங்கு நாம் ஆயிஷா என்பவரைச் சந்தித்தோம். அவருடைய கணவர், தாரிக் முகமது கஸ்மி, 32 வயதாகும் யுனானி மருத்துவர். 2007 இல் நடைபெற்ற பைசாபாத், பராபங்கி மற்றும் லக்னோ குண்டு வெடிப்புகளின் மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர். இவர்தான் உத்திரப் பிரதேச ஹர்கத்-உல்-ஜிஹாதி-இஸ்லாமியின் பிராந்தியத் தளபதியாக போலீஸாரால் கருதப்படுபவர்.


தாரீக் தற்போது லக்னோ அருகிலுள்ள உன்னாவ் சிறையில் விசாரணைக் கைதியாக இருக்கிறார். ஆயிஷா தற்போது சமோபூர் மற்றும் அன்வாக் கிராமங்களுக்கிடையே, அவருடைய தாய் வீட்டிற்கும் மாமியார் வீட்டிற்குமாக பந்தாடப்படுகிறார். 22 வயதேயுடைய அவர் இப்போது நான்கு குழந்தைகளுக்குத் தாய். மூத்த மகனுக்கு வயது 7, இளையவனுக்கு 3.


2007 இல் தாரீக் கைது செய்யப்பட்ட்திலிருந்து இதுவரை ஆயிஷா இவரை ஒருமுறை கூட சந்திக்கவில்லை. “சந்தித்தும் என்ன செய்யப் போகிறாள்?” இவர்கள் இருக்கும் கிராமத்திலிருந்து லக்னோ சிறைக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்வதற்கு அரை நாள் தேவைப்படும். மிகவும் சிரம்மான பயணம் என அவரது தந்தை முகமது அஸ்லம் கூறுகிறார்.


அவரைப் பேச வைப்பதே மிகுந்த சிரம்மாக இருந்த்து. வெகு நேரம் மெளனமாகவே இருந்தார். “உங்களுக்குத் திருமணமாகி எவ்வளவு காலம் ஆகிறது?” என்று கேட்டேன். ஒன்பது ஆண்டுகள் என பதிலளித்தார். அப்பொழுது அவருடைய மகள் ஜோஹா வந்து அவரை அணைத்துக் கொண்டார். அப்பொழுதுதான் பள்ளிலியிலிருந்து திரும்பியிருந்தாள். நீங்களும் உங்கள் மகளைப் போன்று கல்வி கற்பதற்கு விரும்பவில்லையா என்று கேட்ட்தற்கு, நான் கல்வி கற்க மிகுந்த விருப்பமுடையவளாக இருந்தேன்; தவிர என் தந்தையிடம் அதற்காக மன்றாடியிருக்கிறேன் ஆனால் அவர் என்னை அனுமதிக்கவில்லை, என்று அவரது தந்தையைப் பாராமலேயே கூறினார்.


அவருடைய தந்தைக்கு தாரீக்கினுடைய தந்தையைத் தெரியும். ஆயிஷா தனது ஐந்தாம் வகுப்பு படிப்பை முடித்த்துவுமே இருவருடைய திருமணத்தையும் அவர்களுடைய தந்தையர் நிச்சயித்து விட்டனர். ஆனாலும் ஆயிஷா தனது திருமணத்திற்குப் பிறகே தாரீக்கை முதன் முறையாகப் பார்த்தார். ஆனாலும் அவர்களுடைய உறவு எவ்வித ச்ச்சரவுகளும் இல்லாமல் மிகுந்த சுமூகமாகவே சென்று கொண்டிருந்தது. இயல்பாகவே அவர் மிகவும் நல்லவர் என்கிறார் ஆயிஷா.

தாரீக் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அதற்கு பத்து நாட்கள் பிறகே அவரைக் கைது செய்த்தாக போலீசார் கூறுகின்றனர். இதே போன்று இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பனிரெண்டுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், RDX வெடிமருந்து வைத்திருந்த குற்றத்திற்காக.


இந்தியாவில் தினமும் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு ஆசம்கார்கில் இருக்கும் இளம் முஸ்லிம் சிறுவர்கள்தான் காரணம் என்று சொல்லி உங்களை போலீசார் நம்ப வைத்து விடுவார்கள். ATS என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன Anti-Muslim Squad ஆ? என்று அப்துல் ரஹ்மான் என்பவர் குமுறுகிறார். இவருடைய 22 வயது மகனான சஃபியுர் ரஹ்மான் அஹமதாபாத், சூரத், ஜெய்ப்பூர் மற்றும் தில்லி குண்டுவெடிப்புகளில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

அரசாங்கம் ஒரு சட்டப்பூர்வமான விசாரணை நட்த்தி ஏன் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க்க் கூடாது?? இவ்வாறு கேட்பவர், முகமது ஹனீஃப் என்ற ஒரு கல்லூரி விரிவுரையாளர். எலெக்ட்ரானிக் இஞ்சினியரான இவரது மகன் முகமது சர்வார், ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் முக்கியக் குற்றவாளி. அவருடைய மகன் கைது செய்யப்பட்ட்திலிருந்து, ஹனீஃப் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.டாக்டர்.ஜாவேத் அக்தர் என்பவருடைய மகன் தில்லி குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு, இப்போது தலைமறைவாக இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் இதர உதவிகள் பெற்றுத் தருவதற்காக ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளார். நாங்கள் எங்களது சட்டரீதியான மற்றும் சமூக ரீதியான போராட்டங்களை கூட்டாகச் சந்திக்க முடிவெடுத்துள்ளோம் என்று கூறுகிறார் ஜாவேத் அக்தர். எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணரான இவர் கடந்த லோக் சபை தேர்தலில் போட்டியிட்டவர்.இவ்வாறு பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மிகவும் ஆவேசமாக விவாதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கையில், அவர்களைச் சார்ந்த பெண்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் அவர்களுக்காகப் ப்ரார்த்தனை நிகழ்த்திக் கொண்டும், ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்திக் கொண்டும் இருக்கின்றனர். அவர்களது எண்ண ஓட்டங்களை அறிவது மிகவும் கடினமான விஷயம்.அவர் எந்தவொரு தவறும் செய்யவில்லை. என்றாவது ஒருநாள் அவர் சிறையிலிருந்து வெளி வருவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் ஆயிஷா. ஒவ்வொரு தினமும் அவருடைய குழந்தைகள் அவரைப் பற்றிக் கேட்கும்போது நான் என்ன சொல்வேன்? சில வேளைகளில் பள்ளியில் அவர்களுடைய நண்பர்கள் கேட்கும்போது என்ன சொல்வது? அல்லது அவர்களுக்கு அவர்களது தந்தையை நினைவுதான் இருக்கிறதா? என்று கண்ணீரைத் துடைத்தபடியே வேதனையுடன் கூறுகிறார் ஆயிஷா.டிசம்பர் 12, 2007 இன் நிகழ்வுகள் ஆயிஷா துயிலெழும் முன்பாகவே நடந்து முடிந்து விட்டன. அவருக்கு அது ஒரு சாதாரண தினமாகவே இல்லை. வழக்கத்திற்கு மாறாக உணவு கூட உட்கொள்ளாமல் அவருடைய கணவர் விடியற்காலை 6 மணிக்கெல்லாம் வீட்டை விட்டு சென்று விட்டார். அவர் எப்போதுமே உணவைத் தவிர்த்த்தில்லை. அன்றிரவு அவர் வீடு திரும்பவில்லை. ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்ட்தாக நான் உணர்ந்தேன். அவரிடமிருந்து ஒரு அழைப்பு கூட இல்லை. மொத்த்த்தில் அன்று அவர் அவராகவே இல்லை.அதற்கு மறுதினமும் அவர் வீடு திரும்பாத நிலையில், ரானி கி சராய் காவல் நிலையத்தில் அவரைக் காண்வில்லை என புகார் அளிப்பதாகத் தீர்மானித்தோம். அவரிடமிருந்து எவ்வித தகவலும் இல்லை, டிசம்பர் 22 ஆம் தேதி அவரைத் தொலைக்காட்சி செய்தியில் சிலர் பார்த்த்தாகத் தெரிவித்தனர். ஏதோ ஒரு குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார், என நினைவு கூர்கிறார் ஆயிஷா.அவருடைய கணவர் மீது எவ்விதமான குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன என்பது ஆயிஷாவிற்கு சரியாகத் தெரியவில்லை. அவரும் அவரை தொலைக்காட்சி செய்தியில் பார்க்கவில்லை. தொலைக்காட்சி என்ற பொருளை இதுவரை ஆயிஷா பார்த்த்தே கிடையாது. சில ஹிந்தி மற்றும் உருது நாளேட்டுச் செய்திகளைப் படித்து விட்டு, எப்படி இவ்வாறான அடிப்படையற்ற பொய்ச் செய்திகளை இவர்கள் எழுதுகிறார்கள்?? என்று கோபத்துடன் கேட்டார்.மீடியா வெளியிட்ட செய்திகள் சமியாவையும் அதிருப்தியுறச் செய்தன. அவர்கள் எவ்வாறு இவ்வாறான பொய்யான ஜோடிக்கப்பட்ட செய்திகளை வெளியிடுகிறார்கள்?? இவர்கள் சித்தரிப்பது போன்றதான மனிதரில்லை அவர். அவர் எவ்வளவோ பேருக்கு பல உதவிகள் செய்துள்ளார், நீங்கள் ஏன் அதெல்லாம் எழுதக்கூடாது? என்று குமுறினார்.இப்பெண்கள், எந்தவொரு சூழ்நிலையிலும் தங்களது கணவன்மார்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்பதை தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமையாக நினைக்கிறார்கள். சில வேளைகளில் இவ்விஷயத்தில் அவர்கள் தவறுவதும் உண்டு. முகமது காலித் முஜாஹித் என்பவர் பைஸாபாத், லக்னோ மற்றும் பாராபங்கி குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக்க் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட போது, அவரது மனைவி ஷப்னம் பானு தான் ஏமாற்றப்பட்டதாகவே உணர்ந்தார்.இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே ஆகியிருந்தன. தனது கணவர் விசாரணைக் கைதியாக உன்னாவ் சிறையில் இருந்த போது தனது புகுந்த வீட்டிலேயே வசிப்பதாக ஷப்னம் முடிவு செய்திருந்தார். ஆனால் இம்முடிவு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவர் நிரந்தரமாக தனது பெற்றோர் வீட்டிற்கே திரும்பி விட்டார். “ இப்போதிருக்கும் நிலையில் அவள் திரும்பி வருவாள் என்று நினைக்கவில்லை. அவள் தன்னுடைய எல்லா உடமைகளையும் எடுத்துச் சென்று விட்டார். சமாதானம் என்ற நிலையெல்லாம் இப்போது கடந்து விட்ட்து.” என்கிறார் ஜஹீர் ஆலம் சலாஹி, இவர் காலித் முஜாஹித்தினுடைய மாமா, தவிர, ஜமாத்-ஈ-இஸ்லாமியின் உறுப்பினர். அவளது துரோகத்தால் குடும்பமே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. அவளால் விளைந்த மன உளைச்சலால் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு இப்போது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன் என்கிறார்.மனைவி என்பவளுக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. கணவர், அவர் சார்ந்தவர்கள் மற்றும் அண்டை அயலில் இருப்போர் அவர் வரும்வரை காத்திருக்குமாறு கூறுகின்றனர். அந்த நாள் எப்போது வரும் என்று அவர்களுக்குத் தெரியுமா அல்லது அந்த நாள்தான் வருமா என்றாவது தெரியுமா?வீட்டிலேயே அமர்ந்திருப்பது சஹிக்க இயலாத்தாய் இருக்கிறது. “ பழைய நினைவுகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றன, அது நம்மை பைத்தியமாக அடித்து விடுகின்றன, என்கிறார் 23 வயதாகும் ஷஹிபா. அவர் அச்சூழலில் இருந்து வெளியேற நினைக்கிறார். ஆனால் எப்படி? தனது கணவன் மற்றும் புகுந்த வீட்டின் எதிர்ப்புகளுக்கிடையில் அவர் அங்கிருந்து வெளியேறி இப்போது ஆங்கிலத்தில் பட்டமேற்படிப்பிற்காக சேர்ந்துள்ளார்.நிதான புத்தியுடன் இருப்பதற்கு இது ஒன்றுதான் வழி. ஆனால் இவர்கள் இதனைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அதிருஷ்டவசமாக எனது பெற்றோர் என்னைப் புரிந்து கொண்டனர். ஆனாலும் அவளது பெற்றோர், அவள் தன் திருமண உறவை முறித்துக் கொள்வாள் என்று நம்பவில்லை. அவளுடைய கணவர் வெகு விரைவில் திரும்பிவிடுவார் என்று நம்புகின்றனர். ஆனால் ஷஹிபாவிற்கு சந்தேகம்தான். இதற்கிடையில் ஷஹிபா ஒரு வங்கியில் பணிக்காக விண்ணப்பித்துள்ளார். அவளது புகுந்த வீட்டினர் அதனை விரும்பவில்லை. ஆயினும் வேலை கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன், ஏதும் செய்யாமலேயே காலம் கட்த்த விரும்பவில்லை என்கிறார் ஷஹிபா.எல்லாவற்றையும் விட அவர்கள் தனித்து விடப்பட்ட நிலையிலிருந்து வெளியேற விரும்புகிறார்கள். எப்போதுமே உங்களுடைய வாழ்க்கை ஒருவரைச் சுற்றியே இருக்கும்போது, அவருடைய இல்லாமை நிலை, உங்களுடைய வாழ்க்கையை நிலையற்றதாக்கி விடுகிறது. நாம் பற்றிக் கொள்ள ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. அதுதான் நம்பிக்கை.ஆயிஷா, தனது கணவரின் சிறு நூலகத்தில் இருக்கும் மதம் தொடர்பான புத்தகங்களைப் படிப்பதன் மூலம் நிம்மதியை அடைகிறார். அவர் நிறைய நூல்களை வைத்திருக்கிறார். ஆனால் அவர் இங்கிருந்தபோது நான் எதையுமே படிக்க முயற்சித்த்தில்லை. இப்போது அவை எனக்கு நிம்மதியையும் ஆறுதலையும் தருகின்றன. “உங்கள் கணவருக்கு உண்மையிலேயே அந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புள்ளது என்பதை நீங்கள் அறிய நேர்ந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? என்று ஆயிஷாவிடம் கேட்டேன். அதற்கு அவர், “ அவரை அறிந்த யாரிடம் வேண்டுமானாலும் அவரைப் பற்றி நீங்கள் கேட்கலாம். இருக்கவே முடியாது என்றுதான் அனைவருமே கூறுவர், என்று ஆயிஷா பதிலளித்தார்.சமியாவும் இவ்வாறேதான் பதிலளித்தார். இதே கேள்வியை அவரிடமும் கேட்ட போது, “ அவர் குற்றவாளியே அல்ல!” என்று தனது முகத்தைத் தனது துப்பட்டாவால் மூடியபடியே பதிலளித்தார். அவர் மிகவும் அன்பானவர், அவரால் யாரையுமே காயப்படுத்த முடியாது, என்றார்.சமியா, தனது கணவருடைய அப்பாவித்தனத்தைப் பற்றி உறுதியாக இருக்கிறார். அவர்களது திருமணம் பத்தாண்டுகளுக்கு முன்னரே நிச்சயிக்கப்பட்டுவிட்ட படியால், அனைவரையும் விட சமியா அவரை நன்கறிவார்.பொதுவாக அனைத்து சட்ட வழக்குகளிலுமே பாலின பேதம் காணப்படுகிறது என்கிறார் ஃபர்ஹானா ஷா, பம்பாய் உயர்நீதிமன்ற வழக்கறிஞர். அவர் சில தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வாதாடியிருக்கிறார். குறிப்பாக, 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களுக்கு. சில சமயங்களில் விவாகரத்து வழக்குகளினால் குடும்ப நீதிமன்றங்கள் நிறைந்திருக்கும் போது, இந்த தீவிரவாதக் குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய மனைவிகள் தனிப்பட்டு உயர்ந்து நிற்கின்றனர், என்கிறார். இவர்கள் பொதுவாகவே பொருளாதார ரீதியாக மிகவும் அடித்தட்டு நிலையில் இருப்பவர்கள், தவிர போதுமான கல்வியறிவும் கிடையாது. ஆனால் தங்களது திருமண பந்த்த்தை நிலைக்க வைப்பதில் அவர்களுக்கு இருக்கும் முனைப்பு அலாதியானது, என்கிறார்.சமியாவிற்கு, வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வது என்பது அறவே நடவாத செயல். தன்னைத் தீவிரவாதியின் மனைவி என்று சமூகம் அழைத்தாலும் அதனைப் பொருட்படுத்த்த் தயாராக இல்லை. இதுதான் அவருடைய காதலின் பரிசு. அவர் தனது வாழ்க்கையில் பல துன்பங்களைக் கடந்து வந்தவர், இளவயதிலேயே பெற்றோர்களை இழந்து விட்டார். நான் எப்படி அவரை நிர்க்கதியாக விட முடியும்? அவருடைய வலியோடு ஒப்பிடுகையில் என்னுடையது ஒன்றுமே இல்லை, என்கிறார் சமியா.தானே சிறையில் தன்னுடைய கணவரை சந்திக்கச் சென்றதை சமியா நினைவு கூர்கிறார். அவர் கேட்டாராம், என்னோடு இருந்தமைக்காக நீ வருத்தப்படுகிறாயா?. “ நான் சொன்னேன், “உங்களை எனது வாழ்க்கையில் அடைந்த்தை விட எனக்கு அதிர்ஷ்டம் ஏதும் இருக்க முடியாது”, என்று, என்று புன்முறுவலுடன் தெரிவிக்கிறார் சமியா.கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, சமியா வீட்டில்தான் இருக்கிறார், ஏதும் செய்வதற்கில்லாமல். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கல்லூரிக்கும் செல்லவில்லை. ஏனெனில் அவரது தந்தை அதற்கு உடன்படவில்லை.சமியாவிற்கு அவளது சினேகிதிகளைப் போன்று திருமணமாகியிருந்தால், ஒரு குடும்பம் இருந்திருக்கும். ஆனால் அவள் இப்போது அவளது பெற்றோர் வீட்டில். அவளது சகோதரர்களின் மனைவிமார்களோடு சேர்ந்து வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்வது மற்றும் அவர்களுடைய குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது என்று இருக்கிறார். தற்போது, அரபு மொழி இலக்கணத்தைப் பயின்று வருகிறார். அதுவும் திருமணம் வரைதான், பிறகு அத்னான் சம்மதித்தால் தொடர்வேன், என்கிறார். வேறு ஏதேனும் பொழுதுபோக்குகள் உண்டா என வினவினேன். ஆம் படிப்பேன், குரான், என்றார். வேறு ஏதேனும் படிப்பீர்களா என்று கேட்ட்தற்கு, படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் குரானிலேயே இருக்கும்போது வேறு எதையும் படிக்கத் தேவையில்லை, என்று மன உறுதியுடன் கூறினார்.

கமெண்ட்ஸ்
jaisankar jaganathan said...

//, படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் குரானிலேயே இருக்கும்போது வேறு எதையும் படிக்கத் தேவையில்லை, என்று மன உறுதியுடன் கூறினார்//

(a+b)(a-b) க்கு என்ன பதில் என்று குரானில் இருந்நால் பதில் போடவும்

ஜீயார் said...

இது jaisankar jaganathan க்கான பதில்

//(a+b)(a-b) க்கு என்ன பதில் என்று குரானில் இருந்நால் பதில் போடவும்.//

(a*a)-(b*b) என்று இதற்கான பதில் குர்ரானில் இருக்கிறது. அதைப் படிக்கும் ஞானம் இருந்தால் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

jaisankar jaganathan said...

//அதைப் படிக்கும் ஞானம் இருந்தால் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
//

அப்படின்னா உங்களூக்கு ராக்கெட் சயன்ஸ் தெரியும்னு சொல்லுங்க

ஜீயார் said...

இது jaisankar jaganathan க்கான பதில்
]

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். உலகில் உள்ள எந்த ஒரு மதமும் தீவிர வாதத்தை ஆதரிக்கவில்லை. தீவிரவாதம் என்பது மனிதனிடம் இருக்கிறதே அன்றி மதத்தில் இல்லை. சில பட்டிமன்றங்களில் குடும்பத்தில் சிறந்தவள் மாமியாரா மருமகளா என விவாதம் நடப்பதுண்டு. மாமியாரில் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு. அதே போல் மருமகளில் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். நன்றாக சிந்தித்தால் நல்ல குணம் கெட்ட குணம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட பெண்ணை சார்ந்ததேயன்றி மாமியார், மருமகள் என்ற அடைமொழியில் இல்லை. அதே போலவே தீவிரவாதமும். இன்றைய உலகில் இஸ்லாமிய மதத்தை சார்ந்த தீவீர வாதிகள் அதிகம் உள்ளார்கள். அதற்காக இஸ்லாமையோ குர்ரானையோ நாம் வெறுக்க கூடாது. இஸ்லாமிய மதத்தை சார்ந்த தீவிரவாதிகள் அதிகமாக இருப்பதற்கு சரித்திரமே காரணம். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் முஸ்லிம் கடுமையாக ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அதனால் அவர்களால் அதன்பின் எவரையும் நம்பமுடியவில்லை. அது மனநோயாக பாதிக்கப்பட்ட சிலர் தீவிரவாதியாகமாறியுள்ளனர்.

இந்தியாவை பொருத்தவரை இந்துக்கள் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் அந்நிய நாட்டில் இருந்து வந்தவர்களே. இங்கே வாழ்ந்த திராவிட இனத்தை கைபர் போலன் கணவாய் வழியாக ஆட்டு மந்தைகளை ஓட்டி வந்த ஆரிய இனம் அடிமை படுத்தியது என்பது முதல் வரலாறு. பாபர் முதல் இப்ராகிம் லோடிவரை ஆண்டது இஸ்லாம். கிழக்கிந்திய கம்பெனியாக வந்து இந்தியாவை கைப்பற்றியது கிறிஸ்தவம். இப்படி மூன்று மதங்களாலும் சிதைக்கபட்டு இந்தியா இன்று சிநைந்து கொண்டு இருக்கிறது. உண்மையான பூர்வீக இந்தியன் அடைமொழியின்றி அநாதையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

jaisankar jaganathan said...

இவ்வளவு பெரிய பதிலுக்கு நன்றி. ஜீயார்

jaisankar jaganathan said...

எல்லாம் சரி ஜீயார். என் கேள்விக்கு எந்த பக்கத்தில் பதில் உள்ளது என்று மட்டும் சொல்லவேயில்லை.

இந்தியர் அனைவரும் ஒரேஇனம் என்று அறிவியல் (DNA) மூலமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஜீயார் said...

நீங்கள் எந்த பக்கம் வரை படித்திருக்கின்றீர்கள் jaisankar jaganathan.

ஜீயார் said...

//இந்தியர் அனைவரும் ஒரேஇனம் என்று அறிவியல் (DNA) மூலமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.//

நாகாலாந்து, அருணாசலபிரதேசத்து இந்தியன் நம்மைவிட சீனாகாரனுடன் தான் தோற்றத்தில் ஒற்றுமையுடையவனாக இருக்கிறான். இலங்கை, பங்களாதேசத்து காரன் தோற்றத்தில் நம்மை போலவே இருக்கிறான். மார்வாடி பெண்கள் செளராஸ்டிரா பெண்கள் பிராமின்கள் மிக அழகாக இருக்கிறார்கள். கடலோர பரதர்கள் வித்யாசமாக இருக்கிறார்கள். இன்னும் ஒவ்வொரு பிரிவிலும் பல வித்யாசங்களை காணமுடிகிறது. இதில் நீங்க கூறிய டி.என்.ஏ சோதனையின் முடிவு என்ன? இந்த பரந்த இந்தியர்கள் அனைவரும் ஒருவரே என்று (முஸ்லிம்கள் உட்பட) என்று அந்த முடிவு கூறியிருந்தால் நிச்சயம் அது பாகிஸ்தான், பங்களாதேஸ், இலங்கை, இந்தியா மக்கள் அனைவரும் ஒருவரே என்று கூறியிருக்கும். இல்லையென்றால் உங்கள் அறிவியலில் பிழையிருக்கும். அந்த முடிவை கொஞ்சம் சொல்லுங்களேன்.

அடுத்து இந்த அறிவியல் முடிவை வைத்து நீங்கள் வைக்கும் வாதம் என்ன?

jaisankar jaganathan said...

//நீங்கள் எந்த பக்கம் வரை படித்திருக்கின்றீர்கள் //

எந்த பக்கம்னு சொல்லுங்க. அத மட்டும் படிக்கிறேன்

jaisankar jaganathan said...

//இந்தியாவை பொருத்தவரை இந்துக்கள் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் அந்நிய நாட்டில் இருந்து வந்தவர்களே. இங்கே வாழ்ந்த திராவிட இனத்தை கைபர் போலன் கணவாய் வழியாக ஆட்டு மந்தைகளை ஓட்டி வந்த ஆரிய இனம் அடிமை படுத்தியது என்பது முதல் வரலாறு. பாபர் முதல் இப்ராகிம் லோடிவரை ஆண்டது இஸ்லாம். கிழக்கிந்திய கம்பெனியாக வந்து இந்தியாவை கைப்பற்றியது கிறிஸ்தவம். இப்படி மூன்று மதங்களாலும் சிதைக்கபட்டு இந்தியா இன்று சிநைந்து கொண்டு இருக்கிறது. உண்மையான பூர்வீக இந்தியன் அடைமொழியின்றி அநாதையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
//

அறிவியல் முடிவு இதற்குத்தான். விக்கீபீடியாவில் படிங்க

யார் said...

கீதையோ, விவிலியமோ, குர்ரானோ படிக்கறதா இருந்தா முழுவதும் படிக்கணும். இவையொன்றும் ரெஃரன்ஸ் புக் இல்லை. எனவே இதை தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் இருந்தா முழுவதும் படிங்க.

ஜீயார் said...

இந்த விக்கிபீடியா முடிவை சரியென்று நீங்கள் நம்புகின்றீர்கள். அதனால் இந்தியர் யாவரும் ஒன்றென்று உணருகின்றீர்கள். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. அல்லது உங்கள் வீட்டில் திருமணம் ஆகாத ஆண் அல்லது பெண் இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. அப்படி ஏதேனும் இருக்கும் பட்சத்தில் இந்த விக்கிபீடியா முடிவை நம்பி நீங்கள் எந்த சாதியும் பார்க்காமல் உங்களைவிட குறைந்த சாதியிலும் பெண் எடுப்பீர்கள் அல்லது குடுப்பீர்கள் என்று உறுதி தரமுடியுமா?

jaisankar jaganathan said...

முஸ்ஸீமில் பல ஜாதிகள் உண்டு. நீங்கள் அரபு நாட்டில்(அரேபியா)பெண் எடுக்க இல்லை குடுக்க முடியுமா

jaisankar jaganathan said...

//இதை தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் இருந்தா முழுவதும் படிங்க/

(a+b)(a-b) தெரிஞ்சுக்க ஒரு புக்க முழுசா படிக்கனுமா.

விக்கிபீடியா தெரிஞ்சா எல்லா ஜாதியிலேயும் பெண் எடுத்து பெண் குடுக்கனுமா. என்ன ஜீயார் வெயில் ஜாஸ்தியா.

குரங்குல இருந்து மனுஷன் வந்த நீங்க குரங்குக்கு பெண் குடுப்பீங்களா

ஜீயார் said...

jaisankar jaganathan

//முஸ்ஸீமில் பல ஜாதிகள் உண்டு. நீங்கள் அரபு நாட்டில்(அரேபியா)பெண் எடுக்க இல்லை குடுக்க முடியுமா//

ஐயையோ நான் முஸ்லிம் இல்லிங்கோ. நான் இந்த மூன்றிலும் இல்லாத திராவிடன்.

ஆனால் கீதை, விவிலியம், குர்ரான் மூன்றையும் படித்தவன். நீங்கள் அல்ல யார் இந்த புனித நூல்களைபற்றி கூறியிருந்தாலும் நான் பதில் சொல்லியிருப்பேன்.

உங்கள் மனதில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அந்நியர்கள் என்று பதிந்துவிட்டு. ஆனால் மேல் ஜாதி இந்துக்களும் அந்நிய தேசத்தவர்களே என்ற உண்மை மட்டும் உங்களுக்கு கசக்கிறது. அதற்காக விக்கிபீடியாவை துணைக்கு அழைக்கின்றீர்கள். இங்க மட்டும் இல்லை இப்போதைய அமேரிக்கர்கள் அனைவரும் பூர்விக ஐயோரிப்பியர்கள் மற்றும் ஆப்ரிக்கர்களே. பூர்வீக அமேரிக்கர்கள் எண்ணிக்கையில் குறைவாக மலைவாசிகளாக இன்றும் அமேரிக்காவில் வசிக்கின்றார்கள். அவர்களுக்கோ தனித்தன்மை இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அதுவும் இல்லை.

jaisankar jaganathan said...

//மேல் ஜாதி இந்துக்களும் அந்நிய தேசத்தவர்களே என்ற உண்மை மட்டும் உங்களுக்கு கசக்கிறது//

ஐயா நானும் திராவிடன் தான். இந்தியா ஒரு வந்தேறிகளின் நாடுதான். ஒத்துக்கொள்கிறேன்

ஜீயார் said...

ஃஃஃஇந்தியா ஒரு வந்தேறிகளின் நாடுதான். ஒத்துக்கொள்கிறேன்ஃஃஃ

நன்றி jaisankar jaganathan உங்களுடன் விவாதம் செய்ததில் பேருவகை அடைகிறேன். மீண்டும் சந்திப்போம்.
Mar 11, 2010

பேருந்தில்...

ஒரு மாலை வேளையில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். பேருந்தில் பயணம் செய்யும் வேளையிலெல்லாம் பெரும்பாலும் நின்று கொண்டே பயணம் செய்வது என் வழக்கம். பல கற்பனைகள் என் நினைவெல்லாம் பொங்கி பெருகுவது பெரும்பாலும் பயணம் செய்யும் வேளைகளில் தான்.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன் நான் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்தேன். பின் வாசல் அருகில் நான் நின்று கொண்டிருந்தேன். எனக்கு முன்பாக வலது பக்கத்தில் மூன்று பேர் அமரும் இருக்கையில் ஒரு நடுத்தர வயது பெண்மணியும் அவள் அருகில் சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் ஜன்னல் ஓரம் ஒரு சிறுவனும் அமர்ந்திருந்தனர். அவர்களது நடவடிக்கை பார்க்கும் பொழுது அம்மா இரண்டாவது மகள் மூத்த மகளின் குழந்தை என தெரிய வந்தது. அக்குழந்தையின் அம்மா பேருந்தின் முன் பக்கம் இருப்பது பயணச்சீட்டு வாங்கும் பொழுது தெரிந்தது.

இந்த மூவர் இருக்கைக்கு எதிர் புறம் இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஒரு காவலர் உடன் ஒரு குற்றவாழியுடன் அமர்திருந்தார். நீதிமன்றம் கூட்டி செல்வதற்காக கையில் விலங்குடன் குற்றவாழியை அமர வைத்திருந்தார்.

என் பார்வையெல்லாம் அச்சிறுவன் மேல் இருந்தது. அச்சிறுவனுக்கு தன் தாயுடன் செல்லவேண்டும் என்ற எண்ணம். அதனால் தன் சித்தி பாட்டியை கடந்து வர முயல்கிறான். ஆனால் அதன் அருகில் இருக்கும் காவலரை தாண்டி செல்ல அவனுக்கு பயமாக இருக்கிறது. அதனால் கொஞ்ச நேரம் அழுது அடம்பிடித்தான். பின் கையை வெளியே நீட்டுவது இருக்கையின் மேல் எழுந்து நிற்பது குதிப்பது என சேட்டைகள் செய்கின்றான். ஆனாலும் அவன் முகத்தில் சந்தோசம் கொஞ்சம் கூட இல்லை.

அவனை பொருத்தவரை அந்த இருக்கை ஒரு சிறைச்சாலை போலவும் அதில் இருந்து விடுதலை பெற முயற்சி செய்வது போலவும் அவன் செய்கைகள் இருந்தது. அவனது மனஓட்டத்தை புரிந்துகொள்ள எவரும் முயற்சி செய்ய வில்லை. அவனை திட்டுவதும் மிரட்டுவதுமாக அவனது சித்தி இருந்தாள்.

சுமார் அரை மணி நேரமாக அவனது போராட்டத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன். தன்னால் முடிந்தவரை போராடினான். ஆனாலும் அவனது போராட்டத்தை புரிந்து கொள்ளும் சக்தி அவர்களிடத்தில் இல்லை. பின்னர் அவனிடம் எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை. மிகவும் அமைதியாக காணப்பட்டான்.

அவன் முகத்தை பார்த்தேன். அதில் காணப்பட்ட வெறுப்பு மிகவும் அதிகமாக இரு்தது. அந்த நிமிடத்தில் அவன் தன்னை புரிந்து கொள்ளாத தன் பாட்டி சித்தி மற்றும் தன் மகன் இப்படி ஒரு போராட்டத்தில் இருப்பானா? என சிந்தித்துப்பார்க்க கூட நேரமில்லாத தன் தாய் என அனைவர் மேலும் அவன் கொண்ட வெறுப்பு மற்றும் இவர்களிடமிருந்து தன்னால் தப்பிக்க முடியவில்லையே என்ன இயலாமை காவலரை பார்க்கும் பயம் கலந்த வெறுப்பு இவை அனைத்தையும் அவன் முகத்தில் பிரதிபலித்தான்.
அந்த முகம் இன்னும் என் கண்களில் தெரிகிறது.