Mar 25, 2022

வெள்ளம் வருமுன்னே

பிணைக்கப்பட்ட சங்கிலியை விடுவித்த மகிழ்ச்சியில் குதித்து ஓடும் நாயை ரசித்த வாறே மெயின் கேட்டை சாத்தி எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு படுக்கையறையில் நுழைந்த தினேஷ், அங்கே ரம்யா பரிட்சை பேப்பர்களை திருத்தி கொண்டு இருப்பதை பார்த்து சற்றே ஆச்சரியத்துடன் பேச்சை துவங்கினான். என்ன ரம்யா ஸ்கூல் பசங்களுக்கு பரிட்சை வைக்கிற மாதிரி இப்ப காலேஜ் பசங்களுக்கும் வைக்க ஆரம்பித்து விட்டாயா? இல்லங்க, எங்கள் காலேஜ் பொண்ணு ஒண்ணு அவங்க சொந்தக்கார பெரியவர் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதே நியாபகம் இருக்குதா.. அந்த பெண்ணிற்கு கவுன்சிலிங் குடுக்குறாங்க. அதில் ஒரு பகுதியாக அந்த பெண்ணை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த வகுப்பிற்கே சில கேள்விகள் தந்து அதில் அந்த பெண்ணின் மனநிலையில் எவ்வளவு முன்னேற்றம் இருக்கிறது என்பதனை கண்டு பிடிப்பாங்களாமாம்.. அதற்கு தான் இந்த பரிட்சை.. ஆமா பொல்லாத கவுன்சிலிங்.. எல்லாம் சும்மா கண் துடைப்பு தானே.. தப்பு பண்ணினவன நடு ரோட்டில் வச்சி சுட்டு கொன்னா அடுத்து எவனும் தப்பு பண்ண பயப்படுவான். அத விட்டு இவனுங்க கவுன்சிலிங் குடுக்கிறாங்களாம். அப்படி எல்லாம் இல்லிங்க.. நான் பக்கத்தில் இருந்து பார்த்தேன். அந்த பெண்ணை ஒரு கண்ணாடி முன் நிறுத்தி அவள் கையில் விபத்து மற்றும் நோயினால் உடல் உறுப்புகளை இழந்த சிலரின் புகைப்படத்தை குடுத்தாங்க. இந்த படங்களுக்கும் உனக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்குதா என்று கேட்டாங்க. அதுபோல