Dec 3, 2016

நம் நாட்டை வழிநடத்துவதெப்படி?


                   இன்றைய சூழலில் மக்கள்பலரும் சமுக ஊடகங்கள் வாயிலாக தத்தம் கருத்துகளை பதிவு செய்கிறார்கள். உயர்மதிப்பு ரூபாய் தாள்கள் மதிப்பற்றது என்ற அறிவிப்பு பல விமர்ச்சனங்களை பெற்றுள்ளது. எனக்கு இதில் ஒரு சந்தேகம் என்னன்னா ஒரு திருடன் இருக்கிறான். அவன் திருடிய பொருட்களை எல்லாம் அவனிடம் இருந்து பறித்துக் கொண்டோம் என்றால் அவன் உடனே தன் திருட்டை விட்டுவிடுவானா அல்லது இதுவரை களவாடிய பொருட்களெல்லாம் போச்சே இனி அதிகமா திருடி விட்டதை பிடிக்கணும் என நினைப்பானா? என்பதே என் ஐயம்.
                  ஆக தேர்ந்த களவாணி எல்லாம் 1000 ரூ 500 ரூ தாள்களை தூக்கி எரிந்து விட்டு 2000 ரூ நோட்டை அடுக்க தயாராகிட்டாங்க. அப்ப என்னதான் பண்ணலாம்? மீண்டும் எல்லா நோட்டையும் செல்லாததாக அறிவிச்சிடலாமா?

இதுக்கு சரியான பதில் டீக்கடையில் வேலைபார்த்தவரிடம் இருக்குமா?
யாரிடம் கேட்கலாம் தீர்வை. ஒரு விவசாயியிடம் கேட்போமா?

அவர் என்ன சொல்றார்னா முதலில் பிரச்சனை எங்கே இருந்து வருதென பார்க்கணும். தீர்வும் அங்கேதான் இருக்கும் என்கிறார். நெல் வயலில் நோய் தாக்கினால் சோளத்திற்கா மருந்தடிப்பன்னு ஒரே வார்த்தையில் சொல்லிட்டாரு.

விவசாயத்தை விடுங்க. இப்ப நம் நாடு இருக்கிற நெலமையில என்ன பண்ணிணால் முன்னேறும்னு கேட்டேன். சற்று யோசித்தவர் ஆரம்பித்தார்.

                   இப்போதைக்கு ரொம்ப நோய் தாக்கப்பட்டிருப்பது ரெவன்யு மற்றும் போலிஸ் டிபார்ட்மென்ட். இந்த இரண்டையும் கவனிச்சாலே பாதி முயற்சியில் வெற்றி பெற்றிடலாம். தலையாரியில் ஆரம்பிச்சு விஎஒ ஆர்ஐ ... கலெக்டர் வரை சரியா இருந்திட்டா எவனும் அரசாங்க சொத்தை கொள்ளையடிக்க முடியாது. இவங்க எப்படி லஞ்சம் வாங்குறாங்க? தவறான கையெழுத்து போடுவதற்கே. இவங்க தவறான கையெழுத்து போடலைனா தவறான வேலைகள் நடக்காது. அப்படியே தவறும் பட்சத்தில் காவல்துறை சரியா இருந்தா தவறுகள் நடைபெற வாய்ப்பில்லை.

                 காவல்துறையில் அதிகம் தவறு நடைபெறுவது ரெக்கமென்டேசன். தவறு செய்யும் ஒருவனுக்கு உயர் அதிகாரி பரிந்து பேச வரவில்லை என்றாலே தண்டனை நிச்சயம். இவங்க இரண்டுபேரும் சிவில் பிரச்சனையை ஒழுங்கா செய்தாலே கிரிமினல் பிரச்சனை வர வாய்ப்பே இல்லை.


           அடுத்து கல்வி யோசிக்கவே வேண்டாம் முற்றிலும் அரசுடமை ஆக்கினாலே போதும். முழுவதும் சரியாயிடும். ஆனா மாணவர்களுக்கு பரிட்சை வைக்கிறோமோ இல்லையோ வருடாவருடம் ஆசிரியருக்கு பரிட்சை வைக்கணும். ஏன்னா எட்டாம் வகுப்பு ஆசிரியருக்கு எட்டாம் வகுப்பு மாணவனுக்க் இருக்கிற அறிவுதான் இருக்கு. பையன் படிச்சி எட்டு ஒன்பது என போயிடுறான். வாத்தியார் எட்டாம் வகுப்பை தாண்ட மாட்டேங்குறாரு.


அப்புறம் விவசாயம்

         கூட்டுறவு சங்கங்களிலிருக்கும் அரசியல்வியாதிகளை விரட்டிட்டு உண்மையான விவசாயி உருப்பினராக தலைவராக இருந்து எல்லா விவசாயியையும் கூட்டுறவிற்குள் கொண்டுவந்து கூட்டுறவு சங்கங்களை சிறப்பாக கவனித்தாலே விவசாயியையும் விவசாயத்தையும் காப்பாத்திடலாம். மாட்டுக்கு எத்தனை கொம்பு இருக்கும் என தெரியாதவன் பால் சொசைட்டி தலைவரா இருந்தா மாடுதான் விளங்குமா பால்தான் கறக்குமா.


இன்னும் யோசிப்போம்.......