Mar 3, 2019

பேரு இன்னும் வைக்கலீங்க..

பகுதி 1

சொந்த ஊரை விவசாயத்தை போட்டது போட்டபடியே விட்டு வந்து இன்றோடு பதினைந்து நாள் ஆச்சி. சென்னை அருகிலே விவசாயத்தை விற்பனை செய்யும் எனது புதிய ஐடியாவை நனவாக்க சென்னை வா என அழைத்த nri நண்பனும் வந்த மூன்றாவது நாளே ஆபிஸ் அழைக்கிறது என யாருமில்லாத தன்னுடைய புதிய வீட்டில் என்னை சிறை வைத்து சென்று விட்டான்.

சதா வேலை வயல் டிவிட்டர் என சுற்றிவந்த எனக்கு இந்த புதிய சூழல் பிடித்திருக்கவே செய்கிறது.. அதுவும் யாருமில்லா தனியுலகில் வாழும் வாழ்வு என்பது எனது எதிர்கால லட்சியத்தில் ஒன்று என்பதால் அதற்கு ஆயத்தமாவதைப் போல இந்த பதினைந்து நாள் வாழ்க்கை என்னை பிரமிக்க வைக்கிறது. 

ஊரில் இருந்து ஏதுவும் அஷ்வின் டிராவல்ஸ்ல அனுப்பியிருந்தால் அதிகாலை பேருந்து நிலையத்தில் எதிர்பார்த்து வாங்கி வருவது தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அந்த தனிவீடே கதி.. வீட்டைச்சுற்றிய தரிசாய் கிடந்த நிலங்களை எல்லாம் புதுசாய் மாற்றிக்கொண்டிருக்கிறேன் இந்த பதினைந்து நாளில்.. நண்பன் மீண்டும் வரும்பொழுது அவனே ஆச்சரியப்பட வேண்டும் என்பதே என் ஆவல்.. அது என்னை நம்பி இத்தனை பெரிய பிராஜெக்டை துணிந்து செய்வோம் என என்னோடு இணைந்தவனுக்கு என் மேல் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என நான் எண்ணுவதாக கூட இருக்கும்.

இன்று காலையில் படுக்கையில் இருந்து எழும்போதே ஏதோவொரு சலனம்.. இன்று ஏதோ நடக்கப்போவதை உணர்த்தியது.. விரைவாக எழுந்து பல் துலக்கி முகத்தை மட்டும் கழுவி துடைத்து விட்டு ஹேங்கரில் கிடந்த ஏதோ ஒரு சட்டையை மாட்டி ஊரில் இருந்து வரும் ஆம்னி பஸ்சை பிடிக்க கிளம்பினேன்..

டிரைவரை பார்த்து பார்சலை பெற்றுக்கொண்டு கிளம்ப ஆயத்தமானபோது..... பள்ளியில் ஒன்றாக படித்த தோழி அதே பஸ்ஸில் வந்து இறங்குவதை கண்டு ஒரு கணம் திக் என்று இருந்தது.. பொதுவாக எதிரில் தெரிந்தவர்களை கண்டாலும் கண்டு கொள்ளாமல் செல்வதே என் வாடிக்கை.. அது போலவே இவளையும் கடந்திட எண்ணியபோது... இங்கே முகவரியை தொலைத்துவிட்டது போன்ற முகத்தோடு இருந்தவளை கண்டுகொள்ளாமல் கடந்திட மனம் வரவில்லை.. துணிந்து அவள் முன்னே சென்று நின்றேன்..

தொடரும்..