ஓராயிரம் கனவுகள் வரிசையாய்
வலம் வந்தாலும்
வலம் வந்தாலும்
என் பள்ளி நாட்கள்
கனவில் வருகையில்
என் உள்ளம் ஏனோ
பூரிப்பின் உச்சத்தை அடைகிறது
அவ்வேளையிலே இன்று
நினைவில் கூட இல்லா
என் பள்ளித் தோழன்
கூட வந்துவிடுகிறான்.
அன்று நான் மறைத்த தவறுகளுக்கு
கூட இன்று என் ஆசிரியர் என்னை கண்டிக்கிறார்.
அன்று நான் ஆசைப்பட்டும்
அழுது உருண்டும் கிடைக்காத
பொருட்களெல்லாம் இன்று
என் கைகளில்.
இறுதிவரை
என்னுடன் பேசாமலே
சென்ற மாணவன் கூட
இன்று என் தோழனாய்.
என்றும் என்னை விட்டு விலகாத
இந்த நினைவுகள் சொல்கின்றது
அந்தப் பள்ளியிலே படித்துக் கொண்டே இருப்போமா? என்று.
No comments:
Post a Comment