சிறுவயது முதலே என்தந்தை
என்னை தொட்டுத் தூக்கியதில்லை.
ஆனால் அவரது தோளில்தான்
பயணம் செய்தேன்.
நானும் ஆசைப் பட்டேன்,
ஒருநாள் அவரை என்தோளில்
சுமப்பேன் என்று.
ஆனால் அவர்தம்
இறுதி ஊர்வலத்திலும்
என் ஆசை நிறைவேற வில்லை.
இன்னும் உறுதியாய் இருக்கிறேன்
அவர்(பெயரை) வெகுதூரம்
சுமந்து செல்வேன் என்று.