Dec 30, 2008

ஞாலத்தின் மாணப்பெரிது

அனைவரது கண்களும் ராகுலையே பார்க்கின்றன. சில கண்களில் ஆச்சரியம், சில கண்களில் வியப்பு, இன்னும் சிலவற்றில் கோபம், பொறாமை என நவரசமும் ராகுலை நோக்க, அவனோ எந்த சலனமும் இன்றி மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருக்கும் ஸ்வேதாவுடன் பேசுவதிலே கவனமாக இருந்தான்.

முதல் நான்கு இருக்கைகள் பெண்களுக்கு, அடுத்த இரண்டு ஆசிரியைகளுக்கு, அடுத்து ஆசிரியர்கள், கடைசி ஐந்து இருக்கைகள் மாணவர்களுக்கு. இதுவே எங்கள் கல்லூரிப் பேருந்தின் எழுதப் படாத விதி.

இதுவரை நடுவரிசையில் சதா புத்தகத்தடனே மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் ராகுலின் இன்றைய மாற்றம் எங்களுக்கிடையே அதிர்ச்சியை தருவது இயல்புதானே. அதுவும் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு பேருந்தின் உள்ளே, வெளியே என எவரையும் விட்டுவைக்காமல் கிண்டலடிக்கும் எங்களையே கிண்டல் செய்யும் செயல்தானே இது.

கல்லூரி வளாகத்தில் பேருந்து நுழைந்தும், அவரவர் தத்தம் வகுப்புகளை நோக்கிச் செல்ல, கல்லூரிக் கேண்டீனை நோக்கி எங்கள் படையை செலுத்தினோம்.

கடைசி இருக்கை ரோமியோக்களின் இன்றைய காட்சிப் பொருளாகவிருந்த தம்மை காத்த ராகுலை நன்றியோடு பார்த்தாள், முன் இருக்கை அருகே தனியொருத்தியாய் நின்று கொண்டிருந்த தேவி

No comments: